அடை

•ஜூலை 21, 2008 • பின்னூட்டமொன்றை இடுங்கள்

அடை

தேவையான பொருட்கள்:

பச்சரிரிசி – நூறு கிராம்
புழுங்கலரிசி – நூறு கிராம்
பாசிப் பருப்பு – நூறு கிராம்
கடலை பருப்பு- நூறு கிராம்
சோம்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் – ஒரு தேக்கரண்டி
துவரம் பருப்பு- நூறு கிராம்
உளுந்து – நூறு கிராம்
வர மிளகாய் – 5
பூண்டு – இரண்டு பல்
தேங்காய் துருவல் – இரண்டு டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சின்ன வெங்காயம் – இருநூறு கிராம்

செய்முறை:

முதலில் அரிசி வகைகளையும், பருப்பு வகைகளையும் ஒன்றாக அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். தனியாக ஒரு கிண்ணத்தில் வரமிளகாய், சோம்பு இரண்டையும் ஊற வைக்க வேண்டும். சின்ன வெங்காயத்தை மிக நைசாக நறுக்க வேண்டும். அரிசி, பருப்பு கலவை நன்கு ஊறியதும் நன்றாக கழுவி உப்பு, ஊற வைத்த மிளகாய், சோம்பு, பூண்டுப் பல் சேர்த்து கிரைண்டரில் போட்டு ஐந்து நிமிடம் அரைக்க வேண்டும்.

வழிக்கும் நேரத்தில் பெருங்காயத் தூள் சேர்த்து ஒரு சுற்று சுற்றியதும் வழித்து எடுக்க வேண்டும். வெங்காயத்தை மாவுடன் நன்கு கலக்க வேண்டும். தோசைக் கல்லை சூடாக்கி ஒரு கரண்டி மாவை வைத்து தோசை போல் ஆனால் சிறிது கணமாக பரப்பி விட வேண்டும். சுற்றி எண்ணை ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு இரண்டு பக்கமும் சிவந்ததும் எடுக்க வேண்டும்.

Advertisements

100 கோடிக்கு விற்பனையான குசேலன்

•ஜூலை 21, 2008 • பின்னூட்டமொன்றை இடுங்கள்


 

 ரஜினி நடித்து வெளிவரவிருக்கும் குசேலன் திரைப்படம் முதல் கட்ட விற்பனையில் 100 கோடியைத் தாண்டி விட்டது. படம் வெளிவரும் போது அதன் விற்பனைத் தொகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒற்றை இலக்க கோடிகளில் தடுமாறிக் கொண்டிருந்த தமிழ் சினிமா தற்போது நூறு கோடிகளை எட்டி விட்டது. இதுபோன்ற சாதனை இதுவரை இந்தி சினிமாவில் மட்டுமே சாத்தியமாகியிருந்தது.

தமிழ் சினிமாவில் அதை சாத்தியமாக்கியவர் ரஜினிகாந்த். ஜப்பான், அமெரிக்கா, கனடா என வெளிநாடுகளில் வசூல் குவிவது அவர் படங்களுக்குத் தான். 80 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட சிவாஜி படம் 100 கோடிக்கும் மேல் வசூலைக் குவித்தது. அதே சாதனை குசேலன் திரைப்படத்திலும் தொடர்கிறது.

குசேலன் திரைப்படத்தின் ஆடியோ மட்டும் மூன்று கோடி ரூபாய்க்கு விற்பனையாகியிருக்கிறது. மொத்தத்தில் படம் இப்போதே நூறு கோடியைத் தாண்டி விற்பனையாகிவிட்டது. படம் வெளிவரும் நேரத்தில் இந்தத் தொகை இன்னும் அதிகரிக்கும் என்பது திரையுலகினர் தரும் செய்தி.

முள்ளங்கி சூப்

•ஜூலை 21, 2008 • பின்னூட்டமொன்றை இடுங்கள்

முள்ளங்கி சூப்

தேவையான பொருட்கள்:

சிவப்பு முள்ளங்கி – 2
பார்லி அரிசி – 100 கிராம்
பச்சைப் பட்டாணி – சிறிதளவு
மிளகுத்தூள், உப்பு – தேவையான அளவு
காரட் – 1
பால் – 100 மில்லி
காலிபிளவர் – சிறிதளவு

செய்முறை:

பார்லியுடன் அரை லிட்டர் தண்ணீரைச் சேர்த்து முக்கால் மணி நேரம் வேக வைக்க வேண்டும். பின்னர் முள்ளங்கி, காலிபிளவர், காரட் ஆகியவற்றை நறுக்கி பார்லியுடன் சேர்த்து மீண்டும் வேக வைக்க வேண்டும். பின்னர் அதனுடன் கொஞ்சம் பால் சேர்த்து மிளகுத்தூள், உப்பு கலந்து, ஒரு கொதி வந்தவுடன் இறக்கி ஆற வைக்க வேண்டும்.

நன்மைகள்:
முள்ளங்கி சிறுநிரக கோளாறுகளை சரி செய்யும்.
ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமன் செய்ய உதவும்.
தினமும் இதன் சாரைக் குடிப்பவார்களுக்கு சர்க்கரை அளவு குறைவதாகவும்,
சிறுநிரகம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினையும் குணமாவதாகவும்
உண்டவர்கள் சொல்கிறார்கள்.

பணத்தைக் கொடு பாலா!

•ஜூலை 18, 2008 • பின்னூட்டமொன்றை இடுங்கள்

 

Bala

பாலாவின் படம் வருகிறதோ இல்லையோ, அவரைப் பற்றி பல சுவாரஸ்யமான, ரகளையான செய்திகள் மட்டும் வந்துகொண்டே இருக்கின்றன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவர் தொடங்கிய நான் கடவுள் திரைப்படம் இப்போது மீண்டும் பஞ்சாயத்துக்கு வந்திருக்கிறது.

இந்தப் படத்தைத் தொடங்கியபோது படத்தின் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன். முதல்பிரதி அடிப்படையில் படத்துக்கு பட்ஜெட் ரூ.4 கோடி. ஆனால் 10 சதவிகித படம் கூட முடிவடையாத நிலையில் படத்துக்கு ரூ.7 கோடிவரை தேவைப்படும் என்று பாலா கூற அதிர்ந்துபோன தேனப்பன் அதோடு படத்தை பிரமிட் சாய்மிராவுக்கு தள்ளிவிட்டார்.

அவர்களும் பாலா கேட்ட 7 கோடியைக் கொடுத்து படத்தை தொடரச் சொன்னார்கள். கிட்டத்தட்ட 230 நாட்கள் படப்பிடிப்பு நடத்திய பாலா, ஒருவழியாக படத்தை முடித்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகளைத் தொடங்கினார். இப்போது மேலும் 8 கோடி கொடுத்தால்தான் படத்தை வெளியிட முடியும் என்று கூறிவிட்டார்.

படம் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக, பட்ஜெட்டுக்குமேல் 8 கோடி ரூபாய் வரை தான் செலவு செய்திருப்பதாகவும், அந்தத் தொகையைக் கொடுத்தால்தான் படத்தை வெளியிட முடியும் என்றும் பாலா தீர்மானமாகக் கூறிவிட, இப்போது விஷயம் தயாரிப்பாளர் கவுன்சிலின் பஞ்சாயத்துக்குப் போய்விட்டது!

புகாரை முதலில் கொண்டுபோனவரே பாலாதான். தான் செலவழித்த மொத்தத் தொகையையும் கொடுத்தால்தான் படத்தை சாய்மிராவுக்குக் கொடுக்க முடியும் என்று உறுதியாக நிற்கிறார் பாலா. சாய்மிராவோ, இந்தப் படத்தை பேசியபடி ரூ.7 கோடிக்கே தங்களுக்குத் தரவேண்டும் என்கிறது.

ஆனால் தயாரிப்பாளர் சங்கம், முதலில் படம் வரட்டும், மற்றதைப் பிறகு பேசிக் கொள்ளலாம் என்று வழக்கமான யோசனையைக் கூற, அதற்கு உடன்படவில்லை பாலா. காரணம் பருத்திவீரனில் அவரது நண்பர் அமீருக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம்.

பருத்திவீரன் மிகப்பெரிய வெற்றிப்படம். இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் கோடி கோடியாகச் சம்பாதித்தாலும், படத்தின் நாயகன் ஒரே இரவில் பல கோடி சம்பளம் வாங்கும் சூப்பர் ஹீரோ ஆகிவிட்டாலும், அந்தப் படத்தை உருவாக்கிய அமீருக்கு இன்னும்கூட ரூ.80 லட்சம், தயாரிப்பாளரிடமிருந்து வர வேண்டியிருக்கிறது.

இதற்கான பஞ்சாயத்து இன்னும் முடிந்தபாடில்லை.

இதை மனதில் கொண்டு, செலவழித்த மொத்தப் பணத்தையும் முதலிலேயே செட்டில் செய்துவிட்டு பெட்டியை எடுங்கள் என கூறுகிறார் பாலா.

இதுவரை வந்த பாலாவின் படங்களைக் காட்டிலும் மிகச் சிறப்பாக இந்தப் படம் வந்திருப்பதாக இப்போதே கோடம்பாக்கத்தில் பேச்சு நிலவுகிறது. படத்துக்கு இளையராஜா கொடுத்திருக்கும் பாடல்கள் வேறு பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. எனவே படத்தை விட்டுவிடவும் மனமில்லாமல், வாங்கவும் துணிவில்லாமல் யோசித்துக்கொண்டிருக்கிறது சாய்மிரா.

என்ன செய்யப் போகிறார் தலைவர் ராமநாராயணன் என்று தமிழ்த் திரையுலகே ஆவலுடன் காத்திருக்கும் பஞ்சாயத்து அநேகமாக இதுவாகத்தான் இருக்கும்!

தோப்புக்கரணம் போடுவது ஏன்?

•ஜூலை 18, 2008 • பின்னூட்டமொன்றை இடுங்கள்

    

விநாயகரை வணங்கும் போது தோப்புக்கரணம் போடும் வழக்கமும், தலையில் குட்டிக் கொள்ளும் வழக்கமும் உள்ளது.

தோப்புக்கரணம் போடுவது குறித்து புராண நிகழ்ச்சி ஒன்று கூற்படுகிறது.

ஒரு முறை விநாயகர் தனது மாமா மகாவிஷ்ணுவின் சக்கரத்தை விளையாட்டாக பிடுங்கி தன் வாயில் போட்டுக் கொண்டுவிட்டார். அதிர்ந்து போனார்மகாவிஷ்ணு.

விநாயகர் பலம் பொருந்தியவர். அவரை மிரட்டி சக்கரத்தை வாங்க முடியாது. அவரை சிரிக்க வைத்து அவர் வாயிலிருந்து சக்கரம் விழுந்தால் சக்கரத்தைஎடுத்துக் கொண்டுவிடலாம் என்று மகாவிஷ்ணு ஐடியா போட்டார்.

தன் நான்கு கைகளாலும் காதுகளை பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போட்டார். இதைப் பார்த்த விநாயகருக்கு சிரிப்பு தாங்கவில்லை, விழுந்து விழுந்துசிரித்தார் விநாயகர். அப்போது வாயிலிருந்த சக்கரம் வெளியே வந்து விழுந்தது. மகா விஷ்ணு சக்கரத்தை எடுத்துக் கொண்டு விட்டார்.

தோப்புக்கரணம் போட்டதால் மகா விஷ்ணுவுக்கு அவரது பொருளைத் திருப்பித் தந்தார். அதே போல நாமும் தோப்புக்கரணம் போட்டால் விநாயகர்வேண்டிய வரத்தை அருள்வார் என்பது நம்பிக்கை.

அருகம்புல் மகாத்மியம்:

விநாயகர் பூஜையின் போது பூக்களுடன் அருகம்புல்லும் கட்டாயம் இடம் பெறும்.

‘அனலாசுரன்’ என்ற அசுரனை விநாயகர் விழுங்கி விட்டார், அனலாசுரன் பெயருக்கு ஏற்றார் போல் அனலாக, தீயாக கொதிக்கக்கூடியவன்.அனலாசுரனை விழுங்கிய பின் அந்த அனலை தணிக்க அருகம்புல்லை விழுங்கினார் விநாயகர்.

அருகம்புல் குளிர்ச்சியானது. அருகம்புல்லை விழுங்கி அனலாசுரனை விழுங்கியதால் ஏற்பட்ட சூட்டை தணித்துக் கொண்டார். இதனால் விநாயகர் பூஜையில்அருகம்புல் சிறப்பான இடம் பெறுகிறது.

பூ இல்லாவிட்டாலும் கூட அருகம்புல் வைத்து பூஜை செய்தால் போதுமானது. அருகம்புல் மூலம் விநாயகரின் வயிற்றை தடவிக் கொடுப்பதை பல விநாயகர்கோவில்களில் பார்க்கலாம். அதற்கு காரணமும் அனசுரனை விழுங்கிய சூடு தணிய வேண்டும் என்பதற்காகத்தான்.

ஆடி பயம் – 19 பட பூஜை

•ஜூலை 18, 2008 • பின்னூட்டமொன்றை இடுங்கள்

 

Rajathi Raja movie still

கோடம்பாக்கத்துக்கும் சென்டிமெண்டுக்கும் உள்ள தொடர்பு சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஆடி மாதம் தொடங்க இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில், இந்த மாதத்தில் சிறப்பான நாள் என்று சொல்லப்பட்ட நேற்று திரும்பிபக்கமெல்லாம் புதுப்பட பூஜைகள் மயம்.

சென்டிமெண்டாக ஆடி மாதத்தில் புதுப்பட பூஜைகளை கோடம்பாக்கத்தில் யாரும் செய்வதில்லை. வெகு அரிதாக ஒன்றிரண்டு தயாரிப்பாளர்கள் மட்டும் நடத்துவார்கள். மற்றவர்கள் ஆடிக்கு முன் அல்லது ஆடி கழிந்த பிறகே பூஜைகளை வைத்துக் கொள்வார்கள்.

நேற்று மட்டும் 19 புதுப் படங்களுக்கு பூஜை போடப்பட்டது. இதனால் ஸ்டுடியோக்களில் திரும்பிய பக்கமெல்லாம் திருவிழா களை.

6 கதாநாயகிகளுடன் லாரன்ஸ் நடிக்க, ஷக்தி சிதம்பரம் இயக்கும் புதுப்படம் ராஜாதி ராஜாவின் பூஜையும் படப்பிடிப்பும் ஏவிஎம் பிள்ளையார் கோயிலில் நடந்தது.

ரம்பா மீண்டும் நடிக்கும் விடியும் வரை காத்திரு பூஜையும் அதே பிள்ளையார் கோயிலில் சில நிமிட இடைவெளியில் நடந்து முடிந்தது. புதிய இயக்குநர் வியாஸ் இயக்கும் இப்படத்தின் நாயகன் பிரகாஷ் ராஜ். முக்கிய வேடத்தில் முமைத் கான் நடிக்கிறார்.

விவேக் கதாநாயகனாக நடிக்கும் மகனே மருமகனே படத்தின் பூஜையும் ஏவிஎம்மில்தான் நடந்த்து. டிபி கஜேந்திரன் இயக்கும் இப்படத்தின் நாயகி ஜோதி.

தகப்பன்சாமி படத்தைத் தயாரித்த கோபால் தயாரிக்கும் புதிய படம் உற்சாகத்தின் பூஜையும், சுப்பிரமணியபுரம் புகழ் ஜெய், விஜயலட்சுமி நடிக்கும் அதே நேரம் அதே இடம் படத்தின் பூஜையும் நேற்று ஏவிஎம்மில் நடந்தது.

புதுமுகங்கள் நடிக்கும் மாமல்லன் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கிழக்கு கடற்கரைச் சாலையில் தொடங்கியது.

ராஜ் டிவியும், நாசரும் இணைந்து தயாரிக்க, இயக்குநர் ரமணா நாயகனாக அறிமுகமாகும் குதிரை பட பூஜைம் படப்பிடிப்பும் நேற்று நடந்தது. ஆறாவது வனம் எனும் பெயரில் ஒரு படத்தின் பூஜையும் நடந்தது.

காத்தவராயன் படத்தைத் தயாரித்த ராமச்சந்திரனின் பெயரிடப்படாத புதிய படத்தின் பூஜையும் நேற்றுதான் நடந்தது. ஆக ஒரே நாளில் ஒன்பது படங்களின் பூஜை மற்றும் படப்பிடிப்பு அமர்க்களமாகத் துவங்கியுள்ளது.

இந்தப் படங்களைத் தவிர மேலும் பத்துக்கும் மேற்பட்ட படங்கள் பெயர் சூட்டப்படாமலேயே சம்பிரதாயமாக பூஜை போடப்பட்டன.

அனைத்து படங்களும் நல்லவிதமாக வெளிவரட்டும், வசூலை அள்ளட்டும்!

வாழைப்பூ கிரேவி

•ஜூலை 18, 2008 • பின்னூட்டமொன்றை இடுங்கள்

வாழைப்பூ – 1
சின்ன வெங்காயம் -5
காய்ந்த மிளகாய் – 5
பூண்டு – 5
புளி – சிறிதளவு
மஞ்சள் தூள், சீரகம், கரம் மசாலா,
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை:

முதலில் வாழைப்பூவை நரம்பு நீக்கி பொடியாக நறுக்கவும்.பிறகு சிறிய பாத்திரத்தில் தனியாக புளியை போட்டு அதில் 1 டம்ளர் தண்ணீரில் கெட்டியாக கரைத்து வைக்கவும்.

மிளகாய், சீரகம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைக்கவும்.வெங்காயத்தை நன்கு பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் புளி கரைத்த தண்ணீரில் வாழைப்பூ, நசுக்கிய வெங்காயம், அரைத்த விழுது, உப்பு, மஞ்சள் தூள், கறிவேப்பிலை, நல்லெண்ணெய் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

இதில், சிறிது கரம் மசாலாவை சேர்க்கவும். எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.

பிறகு, வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, அதனுடன் சேர்க்கவும். இதன் மீது கொத்தமல்லியை நறுக்கி தூவி விடவேண்டும்.

நன்மைகள்:
வாழைப் பூ உடலுக்கு மிகவும் நல்லது. வாதத்தைப் போக்கும். மூல நோயை கட்டுப்படுத்தும்.
வயுற்று ப் புண்ணை ஆற்றும்.இதனை வாரத்திற்கு இரு முறை உண்டு வந்தால்  வயுறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்