வாழைப்பூ கிரேவி
வாழைப்பூ – 1
சின்ன வெங்காயம் -5
காய்ந்த மிளகாய் – 5
பூண்டு – 5
புளி – சிறிதளவு
மஞ்சள் தூள், சீரகம், கரம் மசாலா,
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை:
முதலில் வாழைப்பூவை நரம்பு நீக்கி பொடியாக நறுக்கவும்.பிறகு சிறிய பாத்திரத்தில் தனியாக புளியை போட்டு அதில் 1 டம்ளர் தண்ணீரில் கெட்டியாக கரைத்து வைக்கவும்.
மிளகாய், சீரகம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைக்கவும்.வெங்காயத்தை நன்கு பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் புளி கரைத்த தண்ணீரில் வாழைப்பூ, நசுக்கிய வெங்காயம், அரைத்த விழுது, உப்பு, மஞ்சள் தூள், கறிவேப்பிலை, நல்லெண்ணெய் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
இதில், சிறிது கரம் மசாலாவை சேர்க்கவும். எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.
பிறகு, வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, அதனுடன் சேர்க்கவும். இதன் மீது கொத்தமல்லியை நறுக்கி தூவி விடவேண்டும்.
நன்மைகள்:
வாழைப் பூ உடலுக்கு மிகவும் நல்லது. வாதத்தைப் போக்கும். மூல நோயை கட்டுப்படுத்தும்.
வயுற்று ப் புண்ணை ஆற்றும்.இதனை வாரத்திற்கு இரு முறை உண்டு வந்தால் வயுறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்